திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பாதுகாப்பு அறையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயிலுக்குச் சென்று திட்டப் பணிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இப்பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட அமைச்சர் சேகர்பாபு இன்று காலை திருச்செந்தூர் வந்தார்.

சரவணப் பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானைக் குளியல் தொட்டியையும் அமைச்சர் பார்வையிட்டார். திருச்செந்தூர் கோயிலுக்குள் சென்று சுவாமி மூலவர் மற்றும் சண்முகரை தரிசனம் செய்தார். அதன்பின், தங்கத்தேர் பழுது நீக்கும் பணியை துவக்கினார்.

இன்று முதல் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்பவர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய ஏதுவாக பக்தர்கள் செல்போன்களை வைக்க பாதுகாப்பான அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் சேகர்பாபு இன்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சேவைக்கு 4 சக்கர வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

கோயிலில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். கலெக்டர், அறங்காவலர் குழு தலைவர், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அருள்முருகன், திருச்செந்தூர் கோவில் இணை கமிஷனர் குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கார்த்திக், பிரம்மசக்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

கோவிலுக்குள் இருக்கும் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment