Connect with us

    ITI Requirement

    சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத்திற்கான இலவச  பயிற்சி

    Published

    on

    சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத்திற்கான இலவச  வேலை வாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில:

    சேலம் மாவட்டம்  அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத்திற்கான இலவச வேலை வாய்ப்பு திறன் பயிற்சிக்கு அளிக்கப்படு படுவதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உதவி எலக்ட்ரீஷியன், வெல்டிங் டெக்னீஷியன் மற்றும் இதர தொழில்நுட்பம் குறித்த குறுகிய காலத்திற்கான இலவச பயிற்சிகள் நடைபெறுவதால் அதற்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.

    இந்த குறுகிய காலத்திற்கான இலவச பயிற்சிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற, பயிற்சியில் சேர ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    இந்த குறுகிய கால இலவச பயிற்சிக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் தங்கலின் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டுடன் போட்டோ எடுத்து வர வேண்டும்.

    இது பற்றிய மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஏற்காடு மெயின் ரோடு, சேலம் – 636 007 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    Continue Reading
    Click to comment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Trending