மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2–வது முறையாக தனது முழு கொள்ளளவையும் எட்டியது
ஜூலை 16ஆம் தேதிக்குப் பிறகு, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி வரை 69 நாட்களுக்கு நீர்மட்டம் முழு கொள்ளளவாக பராமரிக்கப்பட்டது
மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அதன் அதிகபட்ச கொள்ளவான 120 அடியை எட்டியது மற்றும் உபரி நீர் 28,000 கனஅடி காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லில் நீசெப்டம்பர் 23ஆம் தேதி 120 அடிக்கும் கீழ் சென்ற 69 நாட்களுக்கு நீர்மட்டம் முழு கொள்ளளவில் பராமரிக்கப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதே நிலையில் கர்நாடக மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணி அறைகளில் இருந்து அதிக அளவில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் நேற்று காலை நிலவரப்படி 30,000 கனஅடி இருந்த நீர்வரத்து நேற்று மாலையே 35,000 கனஅடி அடியாக உயர்ந்தது. இதனால் முக்கிய அருவி, ஐந்து அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறை நாட்களை கழிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி முதல் மேட்டூர் அணை 2-வது முறையும் தனது முழு கொள்ளளவை எட்டியது.
இந்த ஆண்டுடன் 43-வது முறையாக முழு கொள்ளவை எட்டியுள்ளது. இது கடந்த 85 ஆண்டுகளில் மேட்டூர் அணை நிலவரம்.
புதன்கிழமை காலை 8 மணியளவில் நீர்வரத்து 29,000 கனஅடியாகவும், நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. சுரங்கப்பாதையில் வழியாக பவர்ஹவுஸ்-கு காவிரியில் 23,0000 கனஅடியும் தண்ணீரும், உபரி நீர் 16 வென்ட் எல்லிஸ் சேடல் மதகுகளின் வழியாக 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பாசனத்திற்காக கிழக்கு மேற்கு கரை கால்வாய் மூலம் 750 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
செப்டம்பர் 23ஆம் தேதி 120 அடிக்கும் கீழ் சென்ற 69 நாட்களுக்கு நீர்மட்டம் முழு கொள்ளளவில் பராமரிக்கப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் இனி வருகின்ற நாட்களில் உபரி நீர் முழுவதும் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால் அணையை ஒட்டியுள்ள பகுதிகளான அண்ணாநகர், பெரியார்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் அப்பகுதிகளில்வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு முன்கூட்டியே அறிவுருத்தப்பட்டு வருகின்றனர்.