மெட்ரோ இரயில் டிக்கெட்டுகளை இனி வாட்ஸ்ஆப் மூலமாகவும் புக் செய்யலாம்

0
68

மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்ஆப் மூலம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

சென்னையில் தினமும் 2 லட்சம் நபருக்கு மேல் மெட்ரோ ரெயிலை உபயோகிக்கிறார்கள்.  இரயில் நிலையத்தில் டிக்கெட்டுகளை எடுப்பதற்கு பதிலாக பயண அட்டை மற்றும் க்யூ ஆர் வசதிகள் உள்ளன. இதை தவிர கூடுதல் வசதியாக வாட்ஸ்ஆப் மூலமும் டிக்கெட்டுகளை எடுக்கும் முறையை விரைவில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்பத்தைப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிலைய நிர்வாக இயக்குநரான ராஜேஷுசதுர்வேதி அவர்கள்

கைபேசியில் உள்ள  வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை எடுத்து பயணிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொதுவான கைபேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். அந்த எண் கொண்டு பயணிகள் தங்கள் செல்போனில் இருந்து குறுந்தகவல் அனுப்பினால் chat board என்ற தகவல் தெரியும். அதில் டிக்கெட்டுகளை எடுப்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும்..

இதில் பயணிகள் தங்கள் பயண தகவல்களை உள்ளிட்டு பணம் செலுத்தினால் டிக்கெட்டுகள் பயணிகளின் கைப்பேசி எண்ணுக்கு வந்துவிடும். இது தினசரி பயண டிக்கெட்டுகளை எடுக்கும் முறை ஆகும்

இந்த டிக்கெட்டை இரயில் நிலையத்தில் உள்ள நுழைவாயிலில் அமைத்துள்ள க்யூ ஆர் ஸ்கேனர்-இல் காண்பித்தால் மட்டுமே பயணிகள் இரயில் பயணிக்கவும் மற்றும் உள்ளே / வெளியே செல்லவும் முடியும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here