கொல்லிமலை நீர்வீழ்ச்சி ஆர்ப்பரிக்கும் அருவி பொதுமக்களுக்கு குளிக்க தடை

கொல்லிமலை நீர்வீழ்ச்சி ஆர்ப்பரிக்கும் அருவி பொதுமக்களுக்கு குளிக்க தடை

கொல்லிமலை ஆகாய கங்கை அருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்கள் மற்றம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்திபெற்றது.

வனத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த அருவிக்கு 1300 படிகளை கடந்து செல்ல வேண்டும்.

இந்த அருவியில் குளிப்பதற்கு Rs.30 கட்டணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செலுத்தவேண்டும். மழை பொழிவு காலங்களில் இந்நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும்.

கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அருவிக்கு செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்தமழையில் இத்தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் அருவியில் குளிக்க முடியாமல் மிகுந்த வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

Leave a Comment