அக்.15-இல் பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் பெண்களுக்கான தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் அக்.15- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் பற்றி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரான திரு.கௌரிசங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
அக்.15- ஆம் தேதி காலை 9மணி முதலே இந்த தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதில் மாவட்ட வேலைவாய்ப்பு / தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.
இது பெண்களுக்கான சிறப்பு முகாம் என்பதால் இதில் பங்கேற்கும் பெண்களின் கல்வி தகுதி 2020, 2021 & 2022 இல் +2 வகுப்பில் தேர்வடைந்து இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 20 ம், அவர்களின் உயரம் 150cm ம், எடை 40 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும.
இதில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதியுடன் மாத சம்பளமாக Rs.16,557/- வழங்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு தங்களின் 10th,11th & 12- ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தும் அசல் மற்றும் நகல் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கூறியுள்ளார்.