Jallikkattu
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த செய்தியை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாகும். தமிழ் புத்தாண்டான பொங்கலுக்கு முந்தைய நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் போட்டிகள் மிகவும் பிரபலமானவை.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியமிக்க காளைகளை அடக்கும் நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளில் (15ம் தேதி) அவனியாபுரத்திலும், மறுநாள் (16ம் தேதி) பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் நடக்கிறது. இதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் தேர்வு செய்யப்படவுள்ளன. ஆன்லைன் பதிவு விரைவில் தொடங்கும், இதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ளலாம்!
அலங்காநல்லூரில் வரும் 17ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் கலெக்டர்கள் சரவணன், திவ்யாஞ்சி காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- Today News2 months ago
தமிழகத்தில் 1.5 லட்சம் பொறியியல் இடங்களில் 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன
- Gold News2 months ago
தேவை குறைந்ததால் தங்கம் இறக்குமதி ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் 17% குறைந்து 24 பில்லியன் டாலராக உள்ளது
- Two Wheelers (Bike)2 months ago
பஜாஜ் பல்சர் P150 vs பல்சர் 150: புதியது என்ன?
- Today News3 months ago
தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- Two Wheelers (Bike)2 months ago
QJ மோட்டார் 4 புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது: SRC 250, SRC 500, SRV 300 மற்றும் SRK 400
- Today News4 months ago
அக்.15-இல் பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
- Today News4 months ago
3 நாள் சரிவிற்க்கு பிறகு சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 17100க்கு மேல்
- Today News2 months ago
மானியம் பெற மின் கட்டண எண்ணுடன் ஆதாரை எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது