கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகள் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளன. இந்த 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையில் சுமார் 13% மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது என்பது அதிர்ச்சி தகவல். பொதுத்துறை வங்கிகள், நடப்பு நிதியாண்டில், 50 சதவீத வளர்ச்சியுடன், 25,685 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் லாப அளவீட்டில் பதிவான சாதனை குறித்து டுவிட்டரில், வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை (என்பிஏ) குறைக்க அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியே பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரித்ததற்குக் காரணம் என்று கூறியுள்ளார். . இந்திய ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறியுள்ளது.
பெரும் தொழில் நிறுவங்களின் உரிமையாளர்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் உதவி செய்கின்றன. அவ்வகையில் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாமல் வாராக்கடனாக வங்கிகளில் நிலுவையில் உள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக மெகுல் செக்சி, ஜூன் ஜூன் வாளா, விஜய் மல்லையா, பாபா ராம்தேவ் மற்றும் ருசி சோயா உள்ளிட்ட 50 கடன்தாரர்களின் கடன்கள் வாரகடனாக அறிவிக்கப்பட்டு தள்ளுபடி செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது எல்லோராலும் பேசப்பட்ட ஒன்று.
2022-23 நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை 16.61 லட்சம் கோடி ரூபாய், இந்த 10 லட்சம் கோடி வாராக் கடன் தொகையை முழுமையாக வசூலித்தால், நிதிப் பற்றாக்குறையில் சுமார் 61 சதவீதத்தை தீர்க்க முடியும். 7,29,388 கோடிகள் கடந்த நிதியாண்டில் 5.9 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஒத்திவைக்கப்பட்ட ரூ.10,00,000/- கோடி வாராக் கடனில் சுமார் 1.31 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகள் கடனை வசூல் செய்து கடன் நிலுவையை அறிவிக்க முடியாவிட்டால் கடனை வசூல் செய்ய சிறிது கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள், கடனை வசூல் செய்ய முடியா விட்டால் கடன் தள்ளுபடி செய்யப்படும். இதனால் வங்கியின் ஒத்திவைக்கப்பட்ட கடன் வங்கி கணக்கு புத்தகங்களில் இருந்து அகற்றப்படும். இதன்மூலம் குறிப்பிட்ட வாராக்கடன்களை இப்படி செய்வதினால் மட்டுமே, வங்கியின் வாராக்கடன் தொகையை குறைத்து ஒத்தி வைக்கப்பட்ட வாராக்கடன் வரியும் சேமிக்கப்படும்.
கடன் ஒத்தி வைக்கப்பட்ட பிறகுதான், விதிப்புக்கு முன் வங்கியின் லாபத்தில் இருந்து வாராக்கடன் வரி கழிக்கப்படும். வங்கிகளின் நிதி நிலைமையை மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளன.பொதுவாக கடன் வசூலிக்க முடியாததால், வங்கியின் புத்தகங்களில் இருந்து கடனை நீக்க முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கடனை முழுவதுமாக கைவிடாமல், கடனை வசூலிக்க சிறப்புக் குழு அமைத்து, வசூலிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.