பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் சென்னையில் ஐந்து வெவ்வேறு இடங்களில் இருந்து 12, 13, 14ம் தேதிகளில் 16,932 சிறப்புபேருந்துகள் புறப்படுகின்றன

pongal special buses 2023

பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 12, 13, 14 ஆகிய தேதிகளில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தியதாக தமிழக போக்குவரத்து துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை ஆணையர், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். … Read more