அக்டோபேர் 14-ஆம் தேதி முதல் 10th-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகம்         

அக்டோபேர் 14-ஆம் தேதி முதல் 10th-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14- ஆம் தேதி முதல் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த கல்வி ஆண்டில் (2021-22) மே மாதம் 6 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

இதில் சுமார் 9 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதி முடித்தனர். இதன் தேர்வு முடிவுகள் 20-ஆம் தேதி ஜூன் மாதம் வெளியானது.

அக்டோபேர் 14-ஆம் தேதி முதல் 10th-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகம்

மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடும் பணியில் தேக்கம் ஏற்பட்ட நிலை தேர்வு பெற்ற மாணவ, மாணவியருக்கு தற்காலிக சான்றிதழ்கள் மட்டுமே ஜூலை மாதம் வழங்கப்பட்டது

இதன் மூலம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களின் மதிப்பெண் அடிப்படையில் பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்தது.

பொதுத்ததேர்வு மற்றும் தனி தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடும் பணி செப்டம்பர் மாதமே முடிவடைந்து, சான்றிதழ்கள் சரி பார்க்கும் பனி முடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்வு துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (13.10.2022) வழங்க பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்மூலம் பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 14-ஆம் தேதியிலிருந்து பெற்றக்கொள்ளலாம் என மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

 

 

Leave a Comment