மிதுனம் மார்ச் மாத ராசி பலன்கள் 

மிதுனம்:

மிதுன ராசி கார அன்பர்களே,

 பழைய கடன்கள் தங்கள் வாய் திறமையால் பைசல் ஆகும். வார்த்தைகளில் தேன் தடவிய வார்த்தைகள் பேசுவதால் உன்னதமான சூழ்நிலை ஏற்படும். பிரிந்த பெரியவர்களோடு ஒன்று சேர வாய்ப்புகள் ஏற்படும். வாகன அமைப்பில் உள்ள சிக்கல்கள் படி படியாக விலகும். அசைய சொத்துக்கள் சேர்க்கும் யோகம் ஏற்படும். சுபகாரியங்களில் உள்ள தடை நீங்கும். உங்கள் முயற்சி வெற்றித்திருவினையாக்கும் கால கட்டம் இது. பரம்பரையாக இருக்கக்கூடிய சுகர் பிபி ஆகிய நோய்களுக்கு சற்று கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகள் விசயத்தில் பூத கண்ணாடி வேண்டாம். தொழிலில் நீண்ட நாளுக்கு பிறகு நன்மைகள் ஏற்படக்கூடிய நல்ல மாதமாக மார்ச் மாதம் காணப்படுகிறது.

 

பரிகாரம்:

எல்லா வித நன்மைகளில் கிடைக்க வியாழக்கிழமைகளில் நவக்கிரகளில் உள்ள குருவிற்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

 உணவற்றவர்களுக்கு மதிய வேளையில் உணவளியுங்கள் அவ்வாறு செய்து வர தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

Leave a Comment