மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
அதில் ஆபீஸ் அசிஸ்டன்ட், ஆபீஸ் கிளெர்க் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகளுக்கு சுமார் 4,500 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
12வது தேர்ச்சி அல்லது மற்ற சமமான படிப்புகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் காலி பணியிடங்க ளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்களின் வயது 18 to 27 மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைக்கு உட்பட்ட வயது தளர்வுகள் உண்டு.
விண்ணப்பதாரர்கள் கணினி முறையிலான தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழக்கத்தில் உள்ள தேர்வு மையங்கள் கோவை, சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி, சேலம், வேலூர், மதுரை, திருநெல்வேலி ஆகும். புதுச்சேரியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன
விண்ணப்பதாரர்கள் எவ்வாறு அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற தெளிவான விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு 04.01.2023- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.