தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு!

முக்கிய தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் விவரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

இந்த ஆண்டு 2022, தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 அன்று வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்லும் குடிமக்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, அக்டோபர் 20-ம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், 21-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செகந்திராபாத்தில் இருந்து சென்னை வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

2022 தீபாவளியை முன்னிட்டு சென்னை தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை தாம்பரத்தில் இருந்து 20ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்படும் ரயில் (06021) மறுநாள் (21ம் தேதி) காலை 9:00 மணிக்கு நெல்லை சென்றடையும்.

நெல்லையில் இருந்து 21ம் தேதி மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் (06022) மறுநாள் (22ம் தேதி) மாலை 3:20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

சென்னை தாம்பரம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

செகந்திராபாத்-ல் இருந்து தஞ்சாவூர்-க்கு 2 சிறப்பு ரயில்கள் அக்டோபர் 22 மற்றும் 29 தேதிகளில் இரு கட்டமாக இயக்கப்படுகின்றன.

செகந்திராபாத்-ல் புறப்படும் நேரம் இரவு 08.25 மணி

தஞ்சாவூர்-க்கு சென்றடையும் நேரம் மறு நாள் இரவு 07.10 மணி.

தஞ்சாவூர்-ல் இருந்து செகந்திராபாத்-க்கு 2 சிறப்பு ரயில்கள் அக்டோபர் 24 மற்றும் 31 தேதிகளில் இயக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்-ல் புறப்படும் நேரம் காலை  07.00 மணி

செகந்திராபாத்-க்கு சென்றடையும் நேரம் மறு நாள் காலை 06.30 மணி.

Leave a Comment