கடகம்:
கடக ராசி அன்பர்களே
அஷ்டம சனியுடன் சூரியன் இருப்பதால் வாகனங்களில் சற்று கவனம் தேவை. தேக ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை தேவை குறிப்பாக அடிவயிறு முட்டி வலி முழங்கால் வலி பாத வலி ஏற்படும் மிக மிக கவனம் தேவை. தோலை தூர பயணங்களுக்கு முன் வலி பிள்ளையாருக்கு சிதர் தேங்காய் உடைப்பது மிகையும் நல்லது. உத்யோகம் வியாபாரம் தொழில் விசயமாக மற்றவர்கள் இடையில் அமைதி காப்பது மிகச்சசிறப்பாகும். தேவை இல்லாத வார்த்தைகளில் சங்கடம் ஏற்படும், ஆகையால் வார்த்தைகளில் கவனம் தேவை. சிறிய வாக்குவாதம் கூட பெரிய அளவுக்கு சிக்கலையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். வாக்குவாதங்கள் தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். திடீர் பணவரவு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். நம்பிக்கையுடன் முன்னேறி செல்லுங்கள்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வரவும் சுப்பிரமணியர் பாடல்களை கேட்பதால் மன அமைதி ஏற்பட்டு பிரச்சனைகள் குறையும்.