ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2849 பேர் பணிநியமனம் ஆணை பெற்றனர்
பள்ளி கல்வி துறையின் மூலமாக ஆசிரியர் தேர்வு வாரியம் 2849 பேருக்கும், 269 பேருக்கு கருணையின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பணிநியமன ஆணை-ஐ வழங்கினார்
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் வகையில் அவர்கள் படிக்கும் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், குடிநீர், கழிவறை, மின் சாதன வசதி போன்ற அத்தியாவசிய வசதிகளை கட்டமைக்க உள்ளது. இதனுடன் 1 to 5ம் வகுப்பு மாணவர்கள் காலை உணவுத் திட்டமும், அவர்கள் இணைய வசதியை உபயோகிக்கவும் ஆவண செய்ய உள்ளது.
தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வீடு தேடி கல்வி, காலை உணவு திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை கொண்டு செயல் படுத்தி வருகிறது.
இதன் மூலம் சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளி கல்வி துறை, நகராட்சி மற்றும் அரசு மேல்நிலை பள்ளியில் முதுகலை, உடற்பயிற்சி மற்றும் கணினி ஆசிரியர் பணி போன்ற 2849 காலி பணி இடங்களுக்கு உண்டான பணி நியமனம் ஆணையையும், வாரிசுதாரர்களுக்கு உண்டான அரச பணி நியமன ஆணையையும் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று 10 பேர்க்கு அடையாளமாக வழங்கினார்.