அனைத்து நேயர்களுக்கும் வணக்கம், பங்குனி மாசம் தமிழ் மாசத்திற்கு எப்படிப்பட்ட பொதுவான பலன்கள் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கு நடக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு 2023 பங்குனி மாதம் நல்ல விதமான மாற்றங்களை தரக்கூடிய நிலையில் மிகவும் அற்புதமான ஓர் அமைப்பாக அமைந்திருக்கிறது. இந்த மாதம் மேஷத்துல திருக்கணித பஞ்சாங்கப்படி17ஆம் தேதி புதபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வராரு மேஷ ராசியில் இருக்கக்கூடிய சுக்கிர பகவான் ரிஷப ராசிக்கு வர்ற ஆக இரண்டு கிரகங்கள் புதன் சுக்கிரன் இரண்டு வெவ்வேற ராசியில் சஞ்சரிக்கிறாங்க. இது எல்லாமே கணக்குல எடுத்துக்கிட்டு இப்ப எப்படிப்பட்ட பொது பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். பொருளாதார சம்பந்தப்பட்ட உயர்வு கிடைக்கும், இந்த மாதத்தில் வேலைவாய்ப்புகள் வாய்ப்புகள் நிறைய இருக்குறதுக்கான .
இந்த பங்குனி மாதத்தில் கண்டிப்பாக உங்களுக்கு லாபம், சந்தோஷம் காணப்படும் பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்பாக பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில் வியாபாரம் மற்றும் சுப காரியத்திற்காக செலவுகள் அதிகமாக காணப்படும். பங்குனி மாதத்தில் தோல் விஷயத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அலச்சல்கள் அதிகமாக இருக்கும் பணவரவில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறைந்து நல்ல அமைப்புகளும் சந்தோஷங்களும் ஏற்படும். புதிய முதலீடுகளுக்கு உண்டான காலகட்டம் ஏற்படும். மனதில் தெளிவும் பொருளாதார சம்பந்தப்பட்ட உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் என்ன பலன்களை தரும் என்பதை பார்க்கலாம் லாபம் மற்றும் சந்தோஷம் பெறக்கூடிய அற்புதமான மாதம் புது விஷயங்கள் சுப விஷயங்கள் நிகழும்.பணத்தட்டுப்பாடு தீரும்.யாருக்காவது பணம் கொடுத்துவிட்டு திரும்பப் பெறாமல் பெற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தீர்கள் என்றால் அந்த பணம் இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும். கடன் சுமைகள் உங்களுக்கு இருந்தால் அதுவும் உங்களை விட்டு நீங்கிவிடும். இந்த மாதத்தில் நிம்மதியான ஒரு வாழ்க்கையில் நீங்கள் அடி எடுத்து வைக்கலாம் .வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் என்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் கண்டிப்பாக உண்டு.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக எல்லா விதத்திலும் ஏற்றங்கள் காணப்படுவதற்கு சகல விதத்தில் நன்மைகள் காணப்படும் மேலும் இந்த வாரத்தில் கண்டிப்பாக உத்தியோகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் பெறக்கூடும். மிதுன ராசிக்காரர்கள் வேலை மாற்றம் படிப்பு மாற்றம் எதிர்பார்த்து காத்துக் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். மிதுனத்திற்கு தொழில் உத்தியோகம் வியாபாரம் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு நல்ல ஏற்றம் அமையும். வெளிநாட்டு உத்தியோகம் வெளிநாடு வேலைவாய்ப்புக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் வெளிநாடு வேலை அமையக்கூடிய வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் கையெழுத்திடுவதற்கு முன்பாக இந்த மாதத்தில் சிறிது கவனமாக இருப்பது மிக மிக முக்கியம் கூடா நட்பு கேடுகளை விளைவிக்கும். பெரியோர்களுடன் வாக்குவாதம் கூடவே கூடாது என்பது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் கடக ராசிக்காரர்கள் திருக்கொள்ளிக்காடுக்கு செல்வது சகல விதத்தில் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கும், திருமண தடை மற்றும் குடும்பத்தில் நிம்மதியற்ற தன்மைக்கு தீர்வு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் கண்டிப்பாக சிறிது கவனமாக இருக்க வேண்டும்.பதற்றம் வேண்டாம் படபடப்பு வேண்டாம் பொறுமை காப்பதும் நன்மையையும் அனுகூலத்தையும் ஏற்படுத்தித் தரும்.அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனியார் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வியாபாரத்தில் இருப்பவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பது நன்மையை தரும் .கோபதாபம் இல்லாமல் இருப்பது ஏற்றத்தை ஏற்படுத்தி தரும். சிம்ம ராசிக்காரர்கள் மேலதிகாரிகள் விஷயத்தில் மட்டும் வாக்குவாதம் வேண்டாம்.
திருநள்ளாறு செல்வது குடும்பத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் எல்லாம் நிவர்த்தி பண்ணி ஏற்றத்தையும் அணுகுலத்தையும் ஏற்படுத்தி தரும்
கன்னி:
கன்னியா ராசிக்காரர்கள் கன்னியா ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோக பணியிடை மாற்றங்கள் கண்டிப்பாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பண வரவு ,தொழில் வியாபாரம் மன சங்கடங்கள் எல்லாம் நிவர்த்தி ஆகிவிடும். தொழில் சார்ந்த கடன் வாங்குவது தவிர்க்கவும். கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. இந்த மதம் திருமணத்தடைகள் நீங்கும்
துலாம்:
துலா ராசிக்காரர்கள் எதிரிகள் விஷயத்தில் இருந்த பதட்டம் குறையும் வழக்குப் போன்ற விஷயம் சாதகம் சந்தோஷம் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் அடையும். புத்திசாலித்தனமாக எடுக்கக்கூடிய முடிவுகள் எல்லாம் பலரால் பாராட்டப்படக்கூடிய அமைப்பை ஏற்படும். மிகப்பெரிய வெற்றியும் எல்லா விஷயத்தையும் பணம் வருவாய் எல்லாமே வந்து மிகப்பெரிய ஏற்றம் இருக்கக்கூடிய காலகட்டமாக இந்த காலகட்டம் நிச்சயமாக அமைவதற்கான அனுகூலங்கள் உள்ளது
பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நிவர்த்தி சுபகாரிய தடைகள் நிவர்த்தி தொட்டது தொடங்கக்கூடிய காலகட்டம் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அமையும்.
விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் பிள்ளைகள் விஷயத்தில் கவனம் பிள்ளைகளுடைய படிப்பு உத்தியோகம் தொழில் வியாபாரத்தில் கோபதாபம் இல்லாமல் இந்த மாதத்தில் இருந்தீர்கள் என்றால் சகல விதத்தில் நன்மையும் சந்தோஷமும் ஏற்படும். பணத்தட்டுப்பாடு தீரும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது .கண்டிப்பாக கர்ப்பிணிகள் மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது சுபிட்சம்.
அனந்த பத்மநாத சுவாமி திருக்கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று வந்தால் குடும்ப தோஷங்கள் நிவர்த்தி ஏற்படும் குடும்பத்தில் துணை அல்லது துணைவியாகும் உங்களுக்கும் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் அனைத்துமே நீங்குவது உங்களுடைய அனுபவத்துல உங்களால பார்க்க முடியும். நீங்கள் வாங்கிய கடன்களை அடைப்பதற்கான நல்ல சூழ்நிலை உள்ளது. ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை தேவை.தாய் வழி உறவு தந்தை வழிகளுடன் வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்க்கவும் .விட்டுக் கொடுத்துப் போகக்கூடிய தனுசு ராசிக்காரர்களுக்கு அரிய விஷயங்கள் இந்த மாதத்தில் பங்குனி மாதத்தில் ஏற்றத்தை ஏற்படுத்தித் தரும். வெளிநாடு வேலைவாய்ப்புக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் வெளிநாடு வேலை அமையக்கூடிய வாய்ப்பை எதிர்பார்க்கலாம்
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சகல விதத்தில் ஏற்றத்தையும் அணுகுலத்தையும் குடும்பத்தில் கல்யாண வாய்ப்பை எதிர்பார்க்கலாம். இந்த மாதத்தில் ஏற்றம் அலுவலகங்கள் தொழில் உத்தியோகம் மன நிம்மதி வெளிவட்டாரம் பணத்தட்டுப்பாடு தீரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அதற்கான செலவுகள் அதிகப்படுத்துவீங்க அதனால பணம் தட்டுப்பாடு ஏற்படும் மாதத்தோடு முற்பகுதியில் மாதத்தோடு பிற்பகுதியில் பணம் வரவு அதிகரிக்கும் முன்னேற்றமான ஒரு சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் சங்கடங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதார மேன்மை ஏற்படும் சுப காரியங்களுக்காக நல்ல செலவுகளும் செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். மூக்கு வாய் தொண்டை சம்பந்தப்பட்ட உபாதைகள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கு.
வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. முதலீடுகள் மூலமாக பணம் வரும் வெளிநாட்டிலிருந்து பணம் வரும் வாய்ப்புள்ளது.
மீனம்
வீடு மனை வாங்கும் யோகம் அமையும். இந்த மாதத்தில் பணவரவு வர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்ல காரியம் நடக்கும். பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உண்டு.பயணங்கள் மன அழுத்தம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்திருக்கும். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு உண்டான அமைப்பு உள்ளது. இந்த மாதம் பொருளாதாரம் மென்மையாக இருக்கும்.